Friday, March 26, 2010

முக்தி நிலை

புத்தனுக்கு போதி மரம்,
எனக்கு வள்ளுவர் கோட்டம் பேருந்து நிறுத்தம்.

எந்த இடம் ? நல்ல இடம் ?

கவிதை எழுத எது நல்ல இடமென்று
கேட்டான் நண்பனொருவன்,

கடற்கரைக்கு செல் என்றான் ஒருவன்,
பூங்காவிற்கு செல் என்றான் ஒருவன்,
மொட்டைமாடிக்கு செல் என்றான் ஒருவன்,

காதலியிருக்குமிடதுக்கு செல்லுங்கலடா,
கவிதை வருமென்று கூறி முடித்தேன் நான்.

பரிசு ?

கவிதை போட்டி என்றார்கள்,
துண்டு சீட்டில் எழுதி வந்திருந்தனர் மற்றவர்கள்,
மேடை ஏறினேன் கையில்  ஏதும் இல்லாமல்,
நிமிர்ந்து பார்த்தேன், சிரித்தேன்,முதல் வரிசையில் நீ,

பார்த்து படித்துவிட்டு வந்தேன் உன்னை,
முதல் பரிசை கையில் கொடுத்தார்கள்,
பரிசு கொடுத்தவனிடம் கேட்கவா முடியும்,
எனக்கு பரிசு வேண்டாம், கவிதைக்குரியவள்
தான் வேண்டுமென்று .

Thursday, March 25, 2010

நான்

 நீ வந்து போன இடத்தை, நான்
வந்து நின்றவுடனேயே உணர்பவன் நான்,

கடற்கரை மணலிலும் உன் பாத சுவடை 
கண்டுபிடிப்பவன் நான்,

எங்கேயோ போக கிளம்பி, உன் வீடு
வந்து சேர்பவன் நான்,

மல்லிகை பூவில் உன் வாசம் வந்ததெப்படி
என்று வியப்பவன் நான்,

நீ இருக்கும் ஊரில் நான் இருப்பதை நினைத்து
பூரிப்படைபவன் நான்,

நீ முகம் கழுவிய நீரை தான் பன்னீராக
விற்கிறார்கள் என்று நம்புபவன் நான்,

இப்படிப்பட்ட என்னை மற்றுமொருவனாக
நீ பார்க்கும்போது, நின்ற இடத்திலேயே
உயிர் போய், உயிர் திரும்புதடி.

Thursday, March 11, 2010

எல்லாம் சுகமே


மார்கழி குளிரில் காலை ஆறு மணிக்கு 
தூக்கம் கண்களை  திறக்க விடாமல்  மறியலிட 
அதை சமாளித்து எழுந்து,

குழாயினுலிரிந்து பனிக்கட்டி உருகி    
ஊற்றுவது போல ஊற்றி கொண்டிருந்த 
குளிர் தண்ணீரில் குளித்து முடித்து,

காலையில் தனது சட்டையை தான் தன்  
நண்பன் போடுவான் என்பதை அறியாமல்
உறங்கி கொண்டிருக்கும்  நண்பனின் 
சட்டையை  உடுத்தி,

என்னை எப்போது தான் மாற்றுவாய் என்று 
ஏக்க பார்வை பார்க்கும் செருப்பை 
அணிந்து கொண்டு,

பெரியண்ணன் ஓட்டி, சின்னண்ணன் ஓட்டி, 
அக்கா ஓட்டிய பிறகு,கடந்த 4 வருடமாக 
என்னுடன் வாழ்ந்து வரும் எனதருமை  மிதி வண்டியில் ஏறி ,

மார்கழி கடுங்குளிரிலும் சட்டை நனைய வியர்க்க, 
40 நிமிடங்கள் மிதியாய் மிதித்து
நான் வந்து சேரவும் நீ  அந்த பெயர் தெரியாதவனுடன்
ஊரே பெயர் போன அவன் வாகனத்தில் ஏறவும் சரியாக இருந்தது.

உனக்காக வாங்க எதுவுமில்லை இந்த மூச்சை தவிர
என்பதை உணர்த்துவதை போல வாங்கி கொண்டிருந்தது
என் மூச்சு வேகமாக. 
என் வாழ்வில் நீ வந்த நாள் முதல்
இல்லை அமாவாசை, 

ஆனால் உன்னையும் என்னையும் பிரிப்பதே 
உன் அம்மா ஆசை !


உன்னிடம் அறிவியலும் தோற்றதே

மருத்துவர்கள்  கூற்று படி 
ஒருவர் மூன்று மாரடைப்புக்கு மேல் 
தாங்க  மாட்டார்கள்  ஆனால்  
நான்  இதுவரை  மூவாயிரத்தை தாண்டிவிட்டேனே  !

Vinnai Thaandi Varuvaaya -- Review            Movie was over and as the Closing credits was playing on the screen, I was staring the screen with one question in my mind..... When was the last time I was bowled over by such a poignant love story ? and I couldn't remember myself ever been there in such situation in the recent past.... hmmmmm i would say not at all in the past. Yes! 'Alaipayuthe' made us to think about love, 'Love story' by erich segal made us to moan for their love,'Unnale unnale' gave us a glimpse of love in the pragmatic grounds but 'Vinnai thaandi varuvaaya' has raised the bar for the standard of love story to a different level. Its been a long pause since a full length intense love story based movie was released but fortunately Gautham has made our wait a worth.

            Gautham menon has proved his abilities on handling romance in all his previous movies. Though those movies' main theme revolved around a different plot, they all had a thin line of beautiful romance. This movie is a full lenght intense love story and gautham gets a nod unanimously from the audience as 'Yes he has done it again'.Story line is not a revolutionary one, but 'simply superb' is the word to define it. As he decribes in the promos of the movie 'poratti podudhu nammala '. Scene by scene, dialogue by dialogue love overflows but the feel of the movie wouln't have reached the audience if the protoganists failed to emote so well. Till date Simbu/Trisha's best ever performances.I am slightly unconvinced on Trisha's casting. There is no question of Trisha's performance but i felt like this story has to be done by fresh faces.
Simbu was brilliant in his role that is because we have never seen simbu so. He gives a fresh face feeling to us and that is what required for this story. I saw simbu as 'Karthik' but not Trisha as 'Jessi' atleast in few scenes.

        For such a story, music is the life and gautham was scare free and care free in this regard. Why not ? he has handed over the responsibility in the hands which holds 2 oscar and 2 grammys in it. First time joining hands with the Legendary A.R.Rahman and as expected the outcome drenched all of us through enthralling music. Like the 4 seasons.... Spring,Summer, Fall and winter whenever A.R.Rahman's audio launches, the next 2 months would be Rahman season, its Rahman season here now.Songs were placed at the right place at the right time. The visuals of the songs are stunning which adds more charm to them.

Verdict : Gautham Menon is the Phenomenon now.