Monday, April 5, 2010
Thursday, April 1, 2010
காதலில் தோல்வியுற்றவன்....... இல்லை காதலியால் தோல்வியுற்றவன் !
துடிக்க மறந்தாலும் உனை நினைக்க மறந்ததில்லையடி என்நெஞ்சம்,
நடிக்க பிறந்தவளே ! ஏனடி செய்தாய் எனக்கு இப்படி ஒரு வஞ்சம்.
என் காதலை நீ ஒப்புக்கொண்ட நாள் தானடி எனக்கு தீபாவளி,
ஒப்புக்கொண்ட நீயோ உன் தோழிகளிடம் எனக்கு தந்த அடையாளம் கோமாளி.
ஒவ்வொரு நொடிப்பொழுதும் உன்னை சுமந்தே வந்ததடி என்மனம்,
எல்லாம் பொய்யென நீ கூற, வெட்டவெளியில் ஆனதடி என் காதல் அம்மணம்.
சந்தித்த பொழுதுகளிலெல்லாம் நீ சிந்தித்து பேசி இருக்கிறாய்,
என் சிந்திப்பெல்லாம் உன்னை சந்தித்து பேசுவது மட்டும்தானடி.
உதட்டில் தான் சாயம் பூசி இருந்தாய் என்று நினைத்தேன்,
உச்சரித்த வார்த்தைகளிலும் சாயத்தை பூசிவிட்டாயே !
காதலில் பொய்கள் சகஜம், காதலே பொய் என்னும்போது ரணம், ரணம்,ரணமடி.

Friday, March 26, 2010
எந்த இடம் ? நல்ல இடம் ?
கவிதை எழுத எது நல்ல இடமென்று
கேட்டான் நண்பனொருவன்,
கடற்கரைக்கு செல் என்றான் ஒருவன்,
பூங்காவிற்கு செல் என்றான் ஒருவன்,
மொட்டைமாடிக்கு செல் என்றான் ஒருவன்,
காதலியிருக்குமிடதுக்கு செல்லுங்கலடா,
கவிதை வருமென்று கூறி முடித்தேன் நான்.
கேட்டான் நண்பனொருவன்,
கடற்கரைக்கு செல் என்றான் ஒருவன்,
பூங்காவிற்கு செல் என்றான் ஒருவன்,
மொட்டைமாடிக்கு செல் என்றான் ஒருவன்,
காதலியிருக்குமிடதுக்கு செல்லுங்கலடா,
கவிதை வருமென்று கூறி முடித்தேன் நான்.
பரிசு ?
கவிதை போட்டி என்றார்கள்,
துண்டு சீட்டில் எழுதி வந்திருந்தனர் மற்றவர்கள்,
மேடை ஏறினேன் கையில் ஏதும் இல்லாமல்,
நிமிர்ந்து பார்த்தேன், சிரித்தேன்,முதல் வரிசையில் நீ,
பார்த்து படித்துவிட்டு வந்தேன் உன்னை,
முதல் பரிசை கையில் கொடுத்தார்கள்,
பரிசு கொடுத்தவனிடம் கேட்கவா முடியும்,
எனக்கு பரிசு வேண்டாம், கவிதைக்குரியவள்
தான் வேண்டுமென்று .

Thursday, March 25, 2010
நான்
நீ வந்து போன இடத்தை, நான்
வந்து நின்றவுடனேயே உணர்பவன் நான்,
கடற்கரை மணலிலும் உன் பாத சுவடை
கண்டுபிடிப்பவன் நான்,
எங்கேயோ போக கிளம்பி, உன் வீடு
வந்து சேர்பவன் நான்,
மல்லிகை பூவில் உன் வாசம் வந்ததெப்படி
என்று வியப்பவன் நான்,
நீ இருக்கும் ஊரில் நான் இருப்பதை நினைத்து
பூரிப்படைபவன் நான்,
நீ முகம் கழுவிய நீரை தான் பன்னீராக
விற்கிறார்கள் என்று நம்புபவன் நான்,
இப்படிப்பட்ட என்னை மற்றுமொருவனாக
நீ பார்க்கும்போது, நின்ற இடத்திலேயே
உயிர் போய், உயிர் திரும்புதடி.

Thursday, March 11, 2010
எல்லாம் சுகமே
மார்கழி குளிரில் காலை ஆறு மணிக்கு
தூக்கம் கண்களை திறக்க விடாமல் மறியலிட
அதை சமாளித்து எழுந்து,
குழாயினுலிரிந்து பனிக்கட்டி உருகி
ஊற்றுவது போல ஊற்றி கொண்டிருந்த
குளிர் தண்ணீரில் குளித்து முடித்து,
ஊற்றுவது போல ஊற்றி கொண்டிருந்த
குளிர் தண்ணீரில் குளித்து முடித்து,
காலையில் தனது சட்டையை தான் தன்
நண்பன் போடுவான் என்பதை அறியாமல்
உறங்கி கொண்டிருக்கும் நண்பனின்
நண்பன் போடுவான் என்பதை அறியாமல்
உறங்கி கொண்டிருக்கும் நண்பனின்
சட்டையை உடுத்தி,
என்னை எப்போது தான் மாற்றுவாய் என்று
ஏக்க பார்வை பார்க்கும் செருப்பை
ஏக்க பார்வை பார்க்கும் செருப்பை
அணிந்து கொண்டு,
பெரியண்ணன் ஓட்டி, சின்னண்ணன் ஓட்டி,
அக்கா ஓட்டிய பிறகு,கடந்த 4 வருடமாக
என்னுடன் வாழ்ந்து வரும் எனதருமை மிதி வண்டியில் ஏறி ,
அக்கா ஓட்டிய பிறகு,கடந்த 4 வருடமாக
என்னுடன் வாழ்ந்து வரும் எனதருமை மிதி வண்டியில் ஏறி ,
மார்கழி கடுங்குளிரிலும் சட்டை நனைய வியர்க்க,
40 நிமிடங்கள் மிதியாய் மிதித்து
நான் வந்து சேரவும் நீ அந்த பெயர் தெரியாதவனுடன்
நான் வந்து சேரவும் நீ அந்த பெயர் தெரியாதவனுடன்
ஊரே பெயர் போன அவன் வாகனத்தில் ஏறவும் சரியாக இருந்தது.
Subscribe to:
Posts (Atom)