மார்கழி குளிரில் காலை ஆறு மணிக்கு
தூக்கம் கண்களை திறக்க விடாமல் மறியலிட
அதை சமாளித்து எழுந்து,
குழாயினுலிரிந்து பனிக்கட்டி உருகி
ஊற்றுவது போல ஊற்றி கொண்டிருந்த
குளிர் தண்ணீரில் குளித்து முடித்து,
ஊற்றுவது போல ஊற்றி கொண்டிருந்த
குளிர் தண்ணீரில் குளித்து முடித்து,
காலையில் தனது சட்டையை தான் தன்
நண்பன் போடுவான் என்பதை அறியாமல்
உறங்கி கொண்டிருக்கும் நண்பனின்
நண்பன் போடுவான் என்பதை அறியாமல்
உறங்கி கொண்டிருக்கும் நண்பனின்
சட்டையை உடுத்தி,
என்னை எப்போது தான் மாற்றுவாய் என்று
ஏக்க பார்வை பார்க்கும் செருப்பை
ஏக்க பார்வை பார்க்கும் செருப்பை
அணிந்து கொண்டு,
பெரியண்ணன் ஓட்டி, சின்னண்ணன் ஓட்டி,
அக்கா ஓட்டிய பிறகு,கடந்த 4 வருடமாக
என்னுடன் வாழ்ந்து வரும் எனதருமை மிதி வண்டியில் ஏறி ,
அக்கா ஓட்டிய பிறகு,கடந்த 4 வருடமாக
என்னுடன் வாழ்ந்து வரும் எனதருமை மிதி வண்டியில் ஏறி ,
மார்கழி கடுங்குளிரிலும் சட்டை நனைய வியர்க்க,
40 நிமிடங்கள் மிதியாய் மிதித்து
நான் வந்து சேரவும் நீ அந்த பெயர் தெரியாதவனுடன்
நான் வந்து சேரவும் நீ அந்த பெயர் தெரியாதவனுடன்
ஊரே பெயர் போன அவன் வாகனத்தில் ஏறவும் சரியாக இருந்தது.
No comments:
Post a Comment