Friday, March 26, 2010

பரிசு ?

கவிதை போட்டி என்றார்கள்,
துண்டு சீட்டில் எழுதி வந்திருந்தனர் மற்றவர்கள்,
மேடை ஏறினேன் கையில்  ஏதும் இல்லாமல்,
நிமிர்ந்து பார்த்தேன், சிரித்தேன்,முதல் வரிசையில் நீ,

பார்த்து படித்துவிட்டு வந்தேன் உன்னை,
முதல் பரிசை கையில் கொடுத்தார்கள்,
பரிசு கொடுத்தவனிடம் கேட்கவா முடியும்,
எனக்கு பரிசு வேண்டாம், கவிதைக்குரியவள்
தான் வேண்டுமென்று .

No comments:

Post a Comment