நீ வந்து போன இடத்தை, நான்
வந்து நின்றவுடனேயே உணர்பவன் நான்,
கடற்கரை மணலிலும் உன் பாத சுவடை
கண்டுபிடிப்பவன் நான்,
எங்கேயோ போக கிளம்பி, உன் வீடு
வந்து சேர்பவன் நான்,
மல்லிகை பூவில் உன் வாசம் வந்ததெப்படி
என்று வியப்பவன் நான்,
நீ இருக்கும் ஊரில் நான் இருப்பதை நினைத்து
பூரிப்படைபவன் நான்,
நீ முகம் கழுவிய நீரை தான் பன்னீராக
விற்கிறார்கள் என்று நம்புபவன் நான்,
இப்படிப்பட்ட என்னை மற்றுமொருவனாக
நீ பார்க்கும்போது, நின்ற இடத்திலேயே
உயிர் போய், உயிர் திரும்புதடி.
No comments:
Post a Comment