துடிக்க மறந்தாலும் உனை நினைக்க மறந்ததில்லையடி என்நெஞ்சம்,
நடிக்க பிறந்தவளே ! ஏனடி செய்தாய் எனக்கு இப்படி ஒரு வஞ்சம்.
என் காதலை நீ ஒப்புக்கொண்ட நாள் தானடி எனக்கு தீபாவளி,
ஒப்புக்கொண்ட நீயோ உன் தோழிகளிடம் எனக்கு தந்த அடையாளம் கோமாளி.
ஒவ்வொரு நொடிப்பொழுதும் உன்னை சுமந்தே வந்ததடி என்மனம்,
எல்லாம் பொய்யென நீ கூற, வெட்டவெளியில் ஆனதடி என் காதல் அம்மணம்.
சந்தித்த பொழுதுகளிலெல்லாம் நீ சிந்தித்து பேசி இருக்கிறாய்,
என் சிந்திப்பெல்லாம் உன்னை சந்தித்து பேசுவது மட்டும்தானடி.
உதட்டில் தான் சாயம் பூசி இருந்தாய் என்று நினைத்தேன்,
உச்சரித்த வார்த்தைகளிலும் சாயத்தை பூசிவிட்டாயே !
காதலில் பொய்கள் சகஜம், காதலே பொய் என்னும்போது ரணம், ரணம்,ரணமடி.
No comments:
Post a Comment