Friday, April 9, 2010

பருவகாலம்

















பத்தாம் வகுப்பு விடுமுறை
அதுபோன்றொரு அனுபவமில்லை இதுவரை

மனித உடலுக்குள் இருக்கும்
மாய ஜாடிகள் திறக்கும்
பருவகால பயணத்தில் கிடைக்கும்
ஒவ்வொரு நொடியும் மனமது கிடந்து திளைக்கும்

தேன் குரல் போய் ஆண் குரல் பிறக்கும்
முகக்கண்ணாடியிலேயே முகமது மூழ்கிகிடக்கும்
பால் வடிந்த கன்னங்கள் பழுக்கும்
அன்றாடம் புதியதாய் பத்து பருக்கள் முளைக்கும்

மூக்கின் கீழ் கம்பளிபூச்சி ஒன்று வந்து படுக்கும்
அதை காணக்காண மனமது றெக்கைகட்டி பறக்கும்
அணிந்துவந்த அரைக்கால் சட்டை மூளையில் கிடக்கும்
புதியதாய் வாங்கிய முழுக்கால் சட்டை இடுப்பிலே இருக்கும்

எதிரில் வரும் பெண்ணை கால்கள் மட்டுமே கடக்கும்
வரமனமில்லாமல் நினைவது அங்கேயே கிடக்கும்
சந்தியாகாலத்தில் மொட்டைமாடி தனிமை பிடிக்கும்
ஏன் எதற்க்கென்றில்லாமல் எதற்க்கெடுத்தாலும் வெட்கம் தாவியனைக்கும்.

No comments:

Post a Comment